நீர்கொழும்பில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்- தற்போது வெளியான தகவல்

நீர்கொழும்பு- கிம்புலாபிட்டிய பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் தனியார் இலகு ரக விமானமொன்று (செஸ்னா 172 Cessna 172 வகை) அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக குறித்த விமானம் அவசரமாகத் தரையிரக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த விமானத்தை ஆண் மற்றும் பெண் விமானிகள் இயக்கியுள்ளனர்.

cursh

இரத்மலானையில் இருந்து சீகிரியாவிற்கு சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த குறித்த விமானமானது, கொக்கலை நோக்கி பயணித்த போதே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த நால்வரில் மூவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், மற்றையவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

#SrilankaNews

Exit mobile version