எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நாட்டை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், பொதுமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வகுக்க அனைத்து அமைச்சுக்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஊரடங்கு நீடிக்குமா அல்லது தளர்த்தப்படுமா என்ற முடிவை ஜனாதிபதி அறிவிக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a comment