பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் லெக்ப்ஹெல் ஜனாதிபதியைச் சந்தித்தார்!

1639015871 presi 2

பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா (பிம்ஸ்டெக்) கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டென்சின் லெக்ப்ஹெல் (Tenzin Lekphell) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

குறித்த சந்திப்பு நேற்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி , பிம்ஸ்டெக் அமைப்பின் ஊடாகக் கட்டியெழுப்பப்படுகின்ற பிராந்திய ஒத்துழைப்பு பயன்மிக்கதாக அமைய வேண்டும்.

அதேபோன்று, பிராந்தியத்தில் வாழ்கின்ற மக்களுக்கு அதன் பிரதிபலன்கள் நேரடியாக வழங்கப்படக்கூடிய வகையில் அங்கத்துவ நாடுகளுடனும் பொதுச் செயலாளர் அலுவலகத்துடனும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்தார்.

மேலும், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் பிரிவு என்பன, இலங்கைக்குரிய பிரதான பிரிவுகளாகும். அதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை எதிர்வரும் ஓரிரண்டு மாதங்களில் முன்வைப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டை, எதிர்வரும் வருடத்தின் முதல் காலாண்டில் நடத்த முடியுமாகுமென்று, ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, பிம்ஸ்டெக் செயலகத்தின் பணிப்பாளர்களான ஹூசைன் முஷாரஃப் (Hossain Mosharaf), மஹிசினீ கொலொன்னே (Mahishini Colonne) ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.

கடந்த வருடம்  பிம்ஸ்டெக் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட லெக்ப்ஹெல் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவாகும்.

Exit mobile version