image 328461d647
அரசியல்இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கும் தொடர்பு!!!

Share

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கும் தொடர்பு!!!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையான் என்று அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது எனும் அசாத் மௌலானாவின் வாக்குமூலத்துக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் இறந்தவர்களுக்காக இலங்கை தமிழ் கட்சி நான்காவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி நிகழ்வின் போது இவ்வாறு கூறியிருந்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

“இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றது.

இதிலே மட்டக்களப்பு மாவட்டத்தின் சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

கடந்த நான்கு வருடங்களாக நாங்களும் இறந்த உறவுகளுக்கு நீதி வேண்டும், சதி செய்து கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

ஒரு புறம் நாங்கள் அஞ்சலி செலுத்துவதாக இருந்தாலும் கூட, இது அரசியல் இலாபங்களுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு குண்டுத்தாக்குதல் என்பதை பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையிலே அசாத் மௌலானா என்று அழைக்கப்படும் அவரது முன்னாள் பேச்சாளர் இந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னால் ராஜபக்ஷர்கள் இருந்ததாகவும், இந்தக் கொடூரமான செயலை செய்ததற்கு பின்னால் தற்போது இராஜாங்க அமைச்சராக இருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தனும் தொடர்பு இருப்பதாக ஐ.நாவிலே அறிக்கை கொடுத்திருக்கின்றார்.

ஆனால், இவர்கள் இன்னும் சுதந்திரமாகவே நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...