அரசியல்இலங்கைசெய்திகள்

சந்திரிகா தலைமையில் ‘பாசத்திற்கான யாத்திரை’ – நாளை ஆரம்பம்!

Share
20230418 154406 scaled
Share

சந்திரிகா தலைமையில் ‘பாசத்திற்கான யாத்திரை’ – நாளை ஆரம்பம்!

எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான பாதயாத்திரை யாழ்ப்பாணம் உட்பட ஐந்து நகரங்களில் இருந்து நாளையதினம் புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் இதனை தெரிவித்ததுடன் இறுதி நிகழ்வில் நாட்டின் பல உண்மைகள் தெரியவரும் – என்றார்.

மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக நாளை 19 ஆம் திகதி யாழ்ப்பாணம், மன்னார், காத்தான்குடி, கண்டி மற்றும் கதிர்காமம் ஆகிய ஐந்து இடங்களில் இருந்து ‘பாசத்திற்கான யாத்திரை’ இடம்பெறவுள்ளது.

வட பகுதிக்கான யாத்திரை காலை நல்லூர் ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து ஆரம்பமாகும். யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிப்பு இடம்பெற்று கிளிநொச்சி, வவுனியா என யாத்திரை செல்லவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் நாட்டின் 5 இடங்களில் இருந்து நாளை ஆரம்பமாகும் ‘பாசத்திற்கான யாத்திரை’ 21 ஆம் திகதி கொழும்பை சென்றடையும். இதன் இறுதி நிகழ்வில் நாட்டின் பல உண்மைகள் தெரியவரும்.அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும் பாசத்திற்கான யாத்திரையில் ஐக்கிய மக்கள் சக்தியும் கைகோர்க்கிறது.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் இலங்கையர்களாக வாழ்வதற்கான அடிப்படை உரிமையை கோருவதே இந்த யாத்திரையின் முக்கியமான நோக்கம் – என்றார்.

குறித்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் தொகுதி பிரதான அமைப்பாளர் ஜெயேந்திரனும் வட்டுக்கோட்டை தொகுதி பிரதான அமைப்பாளர் சதாசிவமும் உடனிருந்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
16 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸின் (Texas ) எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

20 5
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து வெடித்த ஏமனின் ஏவுகணை

ஏமனின் ஹவுதிப்படையினாரால் (Houthi ) ஏவப்பட்ட ஏவுகணை, இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில்...

17 4
இலங்கைசெய்திகள்

யாழில் முதலில் அவருக்கு கால் வைக்க முடியுமா! கடற்றொழில் அமைச்சர் பகிரங்கம்

அநுரவை யாழ்ப்பாணத்தில் கால் வைக்க விடமாட்டோம் எனக் கூறுகின்ற நபர் முதலில் தனக்கு கால் வைக்க...

18 4
உலகம்செய்திகள்

பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI படத்தால் ட்ரம்ப் மீது கடும் விமர்சனம்

தன்னை பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI யால் உருவாக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்ததற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...