யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து அண்மையில் திருட்டில் ஈடுபட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் வாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகைக்கு தந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சந்தேகநபர் திருடிய தொலைபேசிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 6 தொலைபேசியிலும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த டிசெம்பர் 22ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதி – சத்திரச்சந்தியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், குறித்த விற்பனை நிலையத்தில் பெறப்பட்ட சிசிரிவி பதிவுகள் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்றுமுன்தினம் வாழைச்சேனை சென்று சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட மூவரும் யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment