18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 21 ஆம்திகதி முதல் பைஸர் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி விடுத்துள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த வயது பாடசாலை மாணவர்களுக்கு அவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர் அல்லாத 18, 19 வயதுடையவர்களுக்கு தமது வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள சுகாதார பணிமனைகளிலும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதமளவில் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
Leave a comment