88
இலங்கைசெய்திகள்

வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கே பைஸர், மொடோர்னா

Share

உயர்கல்வியை மேற்கொள்ள வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கே பைஸர் அல்லது மொடோர்னா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தடுப்பூசிகளை பெற வேண்டுமாயின் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியது கட்டாயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பைஸர் அல்லது மொடோர்னா தடுப்பூசிகள் ஏற்றப்படமாட்டாது.

நாராஹேன்பிட்டி மருத்துவமனையில் மொடோர்னா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என வெளியாகிய தகவலை அடுத்து அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டனர்.

எனினும் உள்நாட்டு மாணவர்களுக்கு செலுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டபோது அங்கு மாணவர்கள் அமைதியின்மையை தோற்றுவித்தனர்.

இந்த நிலையிலேயே இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...