நாட்டில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கைக்கான திட்டமிடல் அறிக்கை, இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தால் சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பல்வேறு நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு மேற்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறுவர்களுக்கு இம் மாதமே பைஸர் தடுப்பூசி வழங்கப்படுதல் இத் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் ஒக்டோபர் மாத ஆரம்பத்தில், க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள 6 லட்சத்து 46 ஆயிரம் மாணவர்களுக்கும், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 4 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி செலுத்துவது இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாகும்.
அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட ஏனைய சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a comment