நாளைமறுதினம் சிறுவர்களுக்கு பைஸர்!!
நாட்டில் அடுத்த கட்டமாக சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.
இதனடிப்படையில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் , நாட்பட்ட நோய்கள் மற்றும் விசேட தேவை கொண்ட சிறுவர்கள் ஆகியோருக்கு நாளைமறுதினம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதனை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்துள்ளார்.
முதற்கட்ட பணிகள் லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை பைஸர் தடுப்பூசியின் 14 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதன் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment