சிறுவர்களுக்கு மாத்திரமே பைஸர்!
நாட்டில் அனைத்து சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி மாத்திரமே ஏற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கொவிட் செயலணி கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விசேட வைத்திய குழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றமையைத் தொடர்ந்து நாட்டில் 15–19 வயதுக்கிடைப்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசியை மாத்திரம் ஏற்றுமாறு ஜனாதிபதியால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த வயதெல்லையில் உள்ள அனைத்து சிறார்களுக்கும் மருத்துவமனைகளில் மாத்திரம் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை, நாள்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள 12–19 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குமாறு விசேட சுகாதார நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.