அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.
இதன்படி, நாளை முதல் குறித்த நியமனம் வழங்கும் நடவடிக்கைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது என அமைச்சரவை உபகுழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில், 53 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றுகின்றனர். இவர்களில் ஒரு வருட பயிற்சிக் காலத்தை நிறைவு செய்த 42 ஆயிரத்து 500 பேருக்கு நாளை முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பட்டதாரி பயிலுனர்களாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment