Radhakirshnan 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலின் கோரிக்கையை நிராகரித்தது மக்கள் முன்னணி!

Share

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான புதிய அரசில் இணைந்து, எவ்வித பதவிகளையும் ஏற்காதிருக்க மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.

அரசில் இணையுமாறும், அமைச்சு பதவியை ஏற்குமாறும் மலையக மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து முடிவொன்றை எடுப்பதற்காக முன்னணியின் மத்திய குழுக் கூட்டம், அட்டனில் உள்ள கட்சி தலைமையகத்தில், முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று (15.05.2022) நடைபெற்றது.

மத்திய மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடம், சமகால அரசியல் நிலவரம் மற்றும் தற்போது கட்சி கையாள வேண்டிய நகர்வுகள் சம்பந்தமாக கருத்துகள் பெறப்பட்டன.

இவ்வாறு கருத்துகள் பெறப்பட்ட பின்னர், தமிழ் முற்போக்கு கூட்டணியாக, ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் எனவும், புதிய அரசில் எவ்வித பதவிகளையும் ஏறக்கக்கூடாதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

கட்சியால் எடுக்கப்பட்ட இந்த முடிவு முன்னணியின் தலைவரால் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

” நாட்டு மக்களுக்கு எவ்வித தடையுமின்றி எரிபொருள், சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசிய சேவைகள் வழங்கப்பட வேண்டும். பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். இதற்காக அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

மேலும், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் வன்முறையில் ஈடுப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். அகிம்சை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை தாக்க திட்டமிட்ட அனைவரையும் அவர்களுடைய தனிப்பட்ட தகுதி தராதரம் பார்க்காது கைது செய்து சட்டத்தின் முன் கொண்டு செல்ல வேண்டும்.

ஜனநாயகத்திற்காகவும் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காகவும் போராடிய ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பிரதமர், ஜனாதிபதிக்கு ஆவணம் செய்து பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருந்தோட்ட மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உடனடியாக விசேட வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

காலி முகத்திடல் போராட்டகாரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும். இலங்கை சட்டதரணி சங்கத்தின் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஜனாதிபதி முறைமையை ஒழிக்க உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொலிஸாரை தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவதும் ஆனால் அகிம்சை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தாக்கியவர்கள் இன்னும் சுதந்திரமாகவும், வெளியில் உலா வருவதும் ஒரு சட்டம் ஒரு நாடு கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே சட்டத்தை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

ராஜபக்ச குடும்பத்தால் கொள்ளையிடப்பட்ட மக்கள் பணத்தை மீள பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்தல், ஊழல் வாதிகளுக்கு எதிராக உரிய சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். போன்ற தீர்மானங்களும் இதன்போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...