யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்களின் இருவர் அயலவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு , பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் இரவு 09.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளை மூவர் அடங்கிய திருட்டுக் கும்பல் புகுந்துள்ளது.
அதனை அவதானித்த அயலவர்கள், குறித்த வீட்டினை வெளியில் சுற்றி வளைத்து மூன்று திருடர்களையும், மடக்கி பிடிக்க எத்தனித்த போது, ஒருவர் தப்பியோடிய நிலையில், இருவர் மடக்கி பிடிக்கப்பட்டனர்.
மடக்கி பிடிக்கப்பட்ட இருவரும் சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதனை அடுத்து பொலிஸார் இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
#SrilankaNews
Leave a comment