எரிவாயு சிலிண்டருக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் (படங்கள்)

யாழ்ப்பாண நகரம் கொட்டடியில் அமைந்துள்ள லிற்றோ எரிவாயு நிலையத்தில் எரிவாயுவினை நிரப்புவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயுவை பெற்றுக் கொண்ட சம்பவம் இன்று பதிவாகியது.

Gas 02

நீண்டகாலமாக எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக மக்கள் சமையல் வேலைகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் திடீரென்று எரிவாயு வழங்கும் செய்தி கேட்ட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

எரிவாயுவை பெறுவதற்கு 300 பேர் வரை அனுமதி வழங்க முடியும் என்ற தகவல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

அதற்கு மேலதிகமாக மக்கள் வீதியோரத்தில் வெற்று எரிவாயு கொள்கலன்களை தாக்கியவாறு காத்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு நகரங்களிலிருந்தும் மக்கள் எரிவாயுவை பெறுவதற்கு காத்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

எரிவாயுவை பெறுவதற்காக பற்றுசீட்டு ஒன்றும் வழங்கப்பட்டு அதன்படி வரிசையில் நின்று பெறுவதைக் காணமுடிந்தது.

Exit mobile version