பரிசோதனை அறிக்கைக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்!!

X ray

கொழும்பு தேசிய பல் வைத்தியசாலையில் பல மாதங்களாக ‘எக்ஸ்ரே அட்டைகள் இன்மையால் பரிசோதனை அறிக்கைகளைப் பெறுவதில் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கின்றனர்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக வரும் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் ‘எக்ஸ்ரே’ பரிசோதனைக்கு பரிந்துரைத்தாலும் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலை காணப்படுவதாக  நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் கொழும்பு தேசிய பல் வைத்தியசாலை பணிப்பாளர், அஜித் தண்டநாராயணனிடம் வினவிய போது,

சுகாதார வழங்கல் துறையில் சிறிய அளவிலான எக்ஸ்ரே அட்டைகள் முடிவடைந்து பல மாதங்கள் கடந்துவிட்டதாகவும் வௌியில் வாங்குவதற்கு சிறிய அளவிலான எக்ஸ்ரே அட்டைகள் இருப்பில் இல்லாத பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கொழும்பு தேசிய பல் வைத்தியசாலையில் அருகில் உள்ள  வைத்தியசாலைகளில்  மீள வழங்குவதாக கூறி சிறிய அளவிலான எக்ஸ்ரே அட்டைகள் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அந்த வைத்தியசாலைகளிலும் தற்சமயம் சிறிய அளவிலான எக்ஸ்ரே அட்டைகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

Exit mobile version