நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களின் 22 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவிற்கு 02 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
#SrilankaNews
Leave a comment