“மக்களுக்காக அல்ல, சுயநலனுக்காகவே வியாழேந்திரன், பிள்ளையான், அங்கஜன் போன்றவர்கள் நாடாளுமன்றம் வந்துள்ளனர்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சாணக்கியன், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டு மக்கள் இன்று பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவந்த பங்காளிக்கட்சிகள்கூட, அரசை விமர்சித்து வருகின்றன. மக்களுக்காக குரல் கொடுக்கின்றன.
ஆனால் வடக்கு, கிழக்கில் இருந்து வந்து அரசுடன் இருப்பவர்கள் , மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல் மௌனம் காக்கின்றனர். குறைந்தபட்சம் கண்டன அறிக்கையொன்றையாவது விடுவதில்லை. இதன்மூலம் மக்களுக்காக அல்ல தமது இருப்புக்காகவும், சுயநலனுக்காகவே அவர்கள் செயற்படுகின்றனர் என்பது தெளிவாகின்றது.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment