அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரவிந்தகுமாருக்கு எதிராக ஹட்டனில் திரண்ட மக்கள்!!

DSC09569
Share

மக்களை வதைக்கும் அரசுக்கு எதிராகவும், அவ்வாறானதொரு அரசுக்கு ஆதரவு வழங்கி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிராகவும் ஹற்றனில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மக்களை காட்டிக்கொடுத்த துரோகி என விமர்சித்து, இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் உருவப் பொம்மையை போராட்டக்காரர்கள் நடுவீதியில் வைத்து தீயிட்டு கொளுத்தி, எதிர்ப்பை வெளியிட்டனர்.

அத்துடன், மக்கள் கோரிக்கையை ஏற்று பதவி விலக மறுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

ஹட்டன் ஸ்டிரதன் தோட்ட பகுதியைச் சேர்ந்த, பெருந்தோட்ட மக்கள் இன்று தொழிலுக்கு செல்லாது, போராட்டத்தில் இறங்கினர்.

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஸ்டிரதன் பகுதியில் குவிந்த மக்கள், பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், காலி முகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தியும், இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பியவாறு, தமது உள்ளக் குமுறல்களையும் வெளிப்படுத்தினர்.

இப் போராட்டத்துக்கு முன்னர், அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ திருச்சொரூபத்திற்கு முன்பாக மக்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு மெழுகுவர்த்தி வைத்து அஞ்சலி செலுத்தினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் எனவும் பிரார்த்தித்தனர்.

DSC09503 DSC09501 DSC09520 DSC09544 DSC09550  DSC09553 DSC09555 DSC09558 DSC09568

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...