“தற்போதைய அரசாங்கம் தவறான ஆலோசனையுடன் உரங்களைத் தடை செய்ததால் விவசாய நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவே விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கும் மக்கள் அவலத்திற்கும் காரணம்” – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜே.சி. அலவத்துவல.
மேலும், இவ் விவசாய நடவடிக்கையின் வீழ்ச்சியால் தேவையான உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் டொலர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவலம் தமக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.
இத்தகைய வீழ்ச்சி நிலை நாட்டை எதிர்காலத்தில் பஞ்சத்தினை நோக்கி நகர்த்தும். மரக்கறிகள் ஒரு கிலோ 500 ரூபாவிற்கு மேல் விற்கப்படுகின்றது. மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்கின்ற அனைத்து பொருட்களுக்கும் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
இத்தகைய நிலையில் அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கையே நாட்டின் பணவீக்கத்திற்கும்‚ வறுமைக்கும் காரணம். ஆகவே எதிர்வரும் புத்தாண்டில் நாட்டில் பஞ்சம் ஏற்படுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment