‘பெண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையூட்டல் ஆணைக்குழுவுக்கு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
பெண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்ற பெயரில் அண்மையில் வெளியான, உலகில் உள்ள பெரும்புள்ளிகள் உள்ளிட்ட பலரின் மறைமுக சொத்துகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தும் பத்திரிகை, உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த ஆவணத்தில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
பெண்டோரா ஆவணத்தில் இலங்கையின் ஆட்சியாளர்களான ராஜபக்ஷ சகோதர்களின் நெருக்கிய உறவினரான இலங்கையின் முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டு தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில்,தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Leave a comment