courts
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பருத்தித்துறை டிப்போ கைகலப்பு! – 11 பேருக்கு பிணை

Share

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை முகாமையாளர் எதிர்ப்பை மீறியும் மேலதிகாரிக்கு அறிவிக்காமலும் திடீரென சாலைக்குச் சென்ற நிலையில் ஏற்பட்ட கைகலப்பினால் 11 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தனர்.

11 பேரையும் கடுமையாக எச்சரித்த பருத்தித்துறை நீதிவான், 10 ஆயிரம் ரூபாய் காசுப் பிணை மற்றும் இரண்டு ஆள் பிணையில் விடுவிக்க கட்டளையிட்டார்.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றிய அலுவலகரை பருத்தித்துறை சாலை முகாமையாளராக நியமிக்கப்பட்டார். எனினும் அவருக்கு பருத்தித்துறை சாலையின் பெரும்பாலான ஊழியர்கள் எதிர்ப்பு நீடித்தது.

அதனால் அவரை வடபிராந்திய போக்குவரத்து சபையின் அலுவலகமான கோண்டாவிலுக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும் அவர் இன்றைய தினம் கொழும்பு அலுவலகத்துக்கு அறிவித்துவிட்டு மூத்த வடபிராந்திய முகாமையாளருக்கு அறிவிக்காமலும் இன்று காலை பருத்தித்துறை சாலைக்கு சென்றுள்ளார். அதன்போது அங்கு எதிர்ப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்ப்புநிலை கைகலப்பாக மாறிய நிலையில் முகாமையாளர் மற்றும் அவருக்கு ஆதாரவான நால்வர் மற்றும் எதிர்தரப்பானவர்கள் 7 பேர் என 11 பேர் பருத்தித்துறை பொலிஸார் கைது செய்தனர்.

11 பேரும் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரணை செய்த நீதிவான், சந்தேக நபர்கள் 11 பேரையும் எச்சரித்ததுடன், பிணையில் விடுவிக்க கட்டளையிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...