பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, பிரதமர் பதவிக்கான பெயரை, சபாநாயகரிடம் நாளை பரிந்துரைக்கவுள்ளது.
சபாநாயகர் தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது குறித்த பெயர் முன்மொழியப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஆளும் மற்றும் எதிரணிகள் இணைந்து பிரதமர் ஒருவரை முன்மொழியுமாறு பதில் ஜனாதிபதி நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அரசியல் கட்சிகள், கொழும்பில் இன்று பேச்சு நடத்தின. அந்தவகையில் பிரதமருக்கான பெயரை நாளை முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment