tamilni 64 scaled
இலங்கைசெய்திகள்

பெரும் பொருளாதார நெருக்கடியில் மக்கள்

Share

பெரும் பொருளாதார நெருக்கடியில் மக்கள்

இலங்கையில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (05.10.2023) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், லிட்ரோ எரிவாயுவின் விலை 343 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. நீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் மின்சார கட்டணத்தையும் உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு பின்னணியில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசாங்கம் புள்ளி விபரங்களின் அடிப்படையில் நாட்டில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது என கூறி வருகின்றது.

எனினும் நாட்டு மக்களுக்கு அவ்வாறான ஒரு நிலையை உணர முடியவில்லை, மக்களின் வயிற்றுக்கு அதனை உணர முடியவில்லை.

எனவே இந்த விடயங்கள் தொடர்பில் நான் அரசாங்கத்திடம் ஒரு தெளிவான பதிலையே எதிர்பார்க்கின்றேன்.

நாட்டு மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையானது பொருளாதாரத்தை விரிவுப்படுத்துவதற்கு அன்றி பொருளாதாரத்தை சுருங்கச் செய்யும் ஓர் கொள்கையாகவே காணப்படுகின்றது.

மக்களின் வருமான வழிகள் குறைவடையும்போது அவர்கள் எவ்வாறு வாழ்க்கையை முன்னெடுப்பார்கள்?

கடந்த கடந்த 48 மணித்தியாலங்களில் 11 காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டில் தற்பொழுது ஸொம்பீ எனப்படும் ஓர் வகை ஆபத்தான போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...