நாடாளுமன்றம்
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய பிரதமர் நியமனத்தின் பின் இன்று கூடும் முதலாவது நாடாளுமன்றம்

Share

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது புதிய பிரதி சபாநாயகருக்கான தெரிவு இடம்பெறவுள்ளது.

இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, பிரதி சபாநாயகர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயரைப் பரிந்துரைக்கவுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அஜித் ராஜபக்சவின் பெயரை முன்வைக்கத் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, பிரதி சபாநாயகர் தெரிவின்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது என அதன் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தமது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று நாடாளுமன்ற அமர்வு ஆரம்பாகும் சந்தர்ப்பத்தில் உறுப்பினர்களுக்கான ஆசனத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

இதற்கமைய, இதுவரையில் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆளும் தரப்பின் பக்கம் ஆசனம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றச் செயற்பாடுகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் இன்று முற்பகல் 8.30 அளவில் இடம்பெறவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...