ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் அனுப்பட்ட பதவி விலகல் கடிதம் ஜுலை 14 ஆம் திகதி தனக்கு கிடைத்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.
இதன்படி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும்வரை, ஜூலை 14ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் அனைத்து அதிகாரங்களும் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமருக்கு சென்றடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் நாளை 16 ஆம் திகதி கூடவுள்ளது எனவும், சபை அமர்வில் அனைத்து எம்.பிக்களும் பங்கேற்க வேண்டும் எனவும் சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.
#SriLankaNews
Leave a comment