” நாடாளுமன்றத்தின் தேவைக்கு அமைய, நாடாளுமன்றத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலைக்க முடியும். ” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியை வருமாறு,
” நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் அவசியம் என சபாநாயகருக்கு கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமானால் மாத்திரமே இரண்டரை வருடங்கள் தேவைப்படும்.
ஆனால், நாடாளுமன்றத்தின் தேவைக்கேற்ப, நாடாளுமன்றத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலைக்க முடியும்.
அதற்கு அரசியலமைப்பின் 71 ஆவது சரத்தின் அ பிரிவு வழி சமைத்துள்ளது. ” – என்றார் கம்மன்பில.
#SriLankaNews
Leave a comment