Paranthan Protest
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பரந்தன் இளைஞன் படுகொலை: சடலத்துடன் போராடிய மக்கள் (படங்கள்)

Share

கிளிநொச்சி – பரந்தனில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி வழங்குமாறு கோரி ஏ -09 நெடுஞ்சாலையில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த புத்தாண்டு தினத்தில் நால்வர் கொண்ட குழுவினரால் இளைஞர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு பின்னர் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

Paranthan Protest03

குறித்த சம்பவத்தை அவதானித்த அவருடைய மருமகன் அதனை தடுத்து நிறுத்தச் சென்றபோது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Paranthan Protest04

இந்த நிலையில் இந்த விவகாரத்தின் சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

Paranthan Protest05

இதேவேளை மருத்துவப் பரிசோதனையின் பின்னர் குடும்பத்தாரிடம் சடலம் கையளிக்கப்பட்டிருந்தது. சடலத்தை சுமந்து வந்த உறவினர்கள் தற்போது பரந்தன் சந்தியில் சடலத்தை வைத்து ஏ – 09 நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஏ – 09 நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Paranthan Protest07

அத்தோடு மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பரந்தன் சந்தியில் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைப்பதாகவும், ஏனையவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.

Paranthan Protest06

குறித்த விடயங்களை உள்ளடக்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பொலிஸ் அத்தியட்சகரிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்ட நிலையில், கடிதத்தில் உள்ள விடையங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்து பொலிஸ் அத்தியட்சகர் அக் கடிதத்தில் கையெழுத்திட்டார்.

Paranthan Protest01

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...