images 2 1 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழிலும் பாணின் விலை குறைப்பு!

Share
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஒரு இறாத்தல் பாணின் விலையினை பத்து ரூபாய் குறைத்து 160 ரூபாயாக விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்பொழுது நாட்டில் பாண் உற்பத்திக்கு தேவையான பொருட்களின் விலை குறைவடைந்தமையையடுத்து எமது சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
பாண்  உற்பத்திக்கு மா, டீசல் என்பன பின்னிப்பிணைந்தது. தற்பொழுது டீசலின் விலையும் கோதுமை மாவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாங்கள் பாணின் விலையினை யாழ்ப்பாண மாவட்டத்தில் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்
 சாதாரண வறுமைக்குட்பட்ட மக்களுக்கு பாண் ஒரு பிரதானமான உணவு.எனவே சாதாரண பொதுமக்கள் அன்றாடம் தமது உணவினை பெற வேண்டும் என்பதற்காக  பானின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்
அத்தோடு முதல் கட்டமாக  இந்த பாணின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்து உள்ளோம். குறிப்பாக ஏனைய பேக்கரி   உற்பத்தி பொருட்களின் விலையை நாங்கள் சடுதியாக குறைக்க முடியாது.
ஆனால் அதுவும் விரைவில்  குறைக்கவுள்ளோம். எனினும் முதல் கட்டமாக யாழ் மாவட்டத்தில் பாணின் விலையினை பத்து ரூபாய் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம் .
எமது இலாபத்தினை குறைத்து பொதுமக்களுக்கான சேவை நோக்கமாக முதல் கட்டமாக இந்த விலை குறைப்பினை மேற்கொண்டுள்ளோம் -என்றார்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...