யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஒரு இறாத்தல் பாணின் விலையினை பத்து ரூபாய் குறைத்து 160 ரூபாயாக விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்பொழுது நாட்டில் பாண் உற்பத்திக்கு தேவையான பொருட்களின் விலை குறைவடைந்தமையையடுத்து எமது சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
பாண் உற்பத்திக்கு மா, டீசல் என்பன பின்னிப்பிணைந்தது. தற்பொழுது டீசலின் விலையும் கோதுமை மாவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாங்கள் பாணின் விலையினை யாழ்ப்பாண மாவட்டத்தில் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்
சாதாரண வறுமைக்குட்பட்ட மக்களுக்கு பாண் ஒரு பிரதானமான உணவு.எனவே சாதாரண பொதுமக்கள் அன்றாடம் தமது உணவினை பெற வேண்டும் என்பதற்காக பானின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்
அத்தோடு முதல் கட்டமாக இந்த பாணின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்து உள்ளோம். குறிப்பாக ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை நாங்கள் சடுதியாக குறைக்க முடியாது.
ஆனால் அதுவும் விரைவில் குறைக்கவுள்ளோம். எனினும் முதல் கட்டமாக யாழ் மாவட்டத்தில் பாணின் விலையினை பத்து ரூபாய் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம் .
எமது இலாபத்தினை குறைத்து பொதுமக்களுக்கான சேவை நோக்கமாக முதல் கட்டமாக இந்த விலை குறைப்பினை மேற்கொண்டுள்ளோம் -என்றார்.
#srilankaNews
Leave a comment