இன்று முதல் சந்தைக்கு பால்மா விநியோகம் இடம்பெறவுள்ளது.
அண்மையில் துறைமுகத்தில் தேங்கி காணப்பட்ட பால்மா கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன. இந்த நிலையில் இவை புதிய விலைப்படி விநியோகிக்கப்படவுள்ளன.
இவ்வாறு பால்மா இறக்குமதியாளர்கள் சங்க பிரதிநிதி லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மாவின் புதிய விலை ஆயிரத்து 195 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் புதிய விலை 480 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றின் விலைகள் அதிரறுக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் புதிய விலைகள் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment