இலங்கை நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கலாநிதி J.D. மான்னப்பெரும தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனது பதவி விலகல் கடிதத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவிடம் J.D. மான்னப்பெரும கையளித்துள்ளார் என கூறப்படுகிறது.
தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தான் பதவியை இராஜினாமா செய்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக சிவில் நிர்வாகத்தில் முக்கிய பதவிகளை வகிப்போர் தொடர்ச்சியாக பதவி விலகல் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment