tamilni 270 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு அறிவுறுத்தல்

Share

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவதற்காக தமது கடவுச்சீட்டு மற்றும் பணத்தை ஒரு நிறுவனத்திடமோ அல்லது நபரொருவரிடமோ ஒப்படைப்பதில் அவதானமாக இருக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரித்துள்ளது.

எந்தவொரு நிறுவனத்திடமோ அல்லது நபரிடமோ தங்கள் கடவுச்சீட்டு அல்லது பணத்தை ஒப்படைப்பதற்கு முன், அவ்வாறான தரப்பினர்களின் உரிமம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கோரியுள்ளது.

அறிவிப்பில் மேலும், அவ்வாறான தரப்பினர்களின் உரிமம் மற்றும் அது சார்ந்த தகவல்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.

இதுதவிர 1989 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அது தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திகொள்ள முடியும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் கடந்த காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக தெரிவித்து இடம்பெற்ற பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Missing Persons Nuwara Eliya
இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச்...

Displaced
இலங்கை

நுவரெலியாவில் தொடரும் கனமழை – தற்காலிக முகாம்களில் தஞ்சம் கோரிய மக்கள்.

நுவரெலியாவில் சீரற்ற வானிலை காரணமாக, பல தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக...

Ministry of Defence
இலங்கை

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அவசர அறிவித்தல்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு...

Electricity bills
இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித...