IMG 8784
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அதிக கட்டணம்! – வாகன பாதுகாப்பு நிலையத்துக்கு நல்லூரில் பூட்டு

Share

நல்லூர் ஆலய சூழலில் உள்ள வாகன பாதுகாப்பு நிலையத்தில் யாழ். மாநகர சபையினால் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிட்ட வாகன பாதுகாப்பு நிலையம், மாநகர அதிகாரிகளினால் மூடப்பட்டுள்ளது.

நல்லூர் உற்சவகாலத்தை பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வாகனப் பாதுகாப்பு நிலையத்தில் பக்தர்களிடம் இருந்து அதிக பணம் அறவிடப்படுவதாக யாழ்.மாநகர சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

முறைப்பாட்டின் பிரகாரம் அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்து குறித்த விடயம் உண்மை என உறுதிப்படுத்தினர்.

அதனை அடுத்து, குறித்த வாகனப் பாதுகாப்பு நிலையம் யாழ்.மாநகர சபையினால் அறிவிக்கப்பட்ட கட்டணத்திற்கு அதிக கட்டணம் அறவிட்டமையால் யாழ்.மாநகர சபையினால் பூட்டப்பட்டது.

துவிச்சக்கர வண்டிக்கு 20 ரூபாவும் மோட்டார் சைக்கிளுக்கு 30 ரூபாவும் முச்சக்கரண வண்டி மற்றும் கார்; ஆகியவற்றுக்கு 50 ரூபாவும் வானுக்கு 100 ரூபா எனவும் யாழ்.மாநகர சபையினால் கட்டண விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் நிர்ணய கட்டணங்களுக்கு அதிகமான கட்டணங்களை அறவிடுதல் மற்றும் மாநகர சபையின் அங்கீகாரம் பெறாத சிட்டைகளை வழங்குதல் ஆகியவை கண்டறியப்பட்டால் அவ் வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் உடன் மூடப்படும் என்று யாழ்.மாநகர சபை அறிவித்துள்ளது.

IMG 8786

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8 8
இலங்கைசெய்திகள்

24 மணி நேரத்துக்குள் மகிந்த கைது!! சரத் பொன்சேகா

தான் நீதி அமைச்சராக இருந்திருந்தால், மகிந்த மீது முதலாவது வழக்கை பதிவு செய்து அவரை 24...

9 7
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனை – தலைவர் பிரபாகரனை காப்பாற்றிய போர் நிறுத்தம்: சரத் பொன்சேகா

பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை காப்பாற்றுவதற்காக மகிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார் என முன்னாள் இராணுவத் தளபதி...

11 8
இந்தியாசெய்திகள்

விஜயின் கைது: விஜய்காந்த் மனைவியின் நேரடி சவால் – திக்குமுக்காடும் தமிழக அரசு

கரூரில் (Karur) இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட சதி என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுசெயலாளர்...

10 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பிறப்பு வீதம் கடந்த சில ஆண்டுகளில் கடுமையாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்...