இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தலுக்குள்ளான 08 சிறைக்கைதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த அரசியல் கைதிகளுக்கு உடனடி பாதுகாப்பை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளா் நாயகத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளாா்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனை, தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை கைது செய்யுமாறு கோரி குற்ற விசாரணை பிரிவில் சிறை கைதிகளை பாதுகாக்கும் குழு முறைப்பாடு செய்துள்ளது.
லொஹான் ரத்வத்த மீது குற்றவியல் சட்டம் செயற்படுத்தப்பட்டு அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டும் என கைதிகள் பாதுகாப்பு குழு குறிப்பிட்டிருந்தது.
இதற்கமைய, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment