2 27
இலங்கைசெய்திகள்

புதிய புரட்சியை நோக்கி இலங்கை: ஜனாதிபதியால் வரக் காத்திருக்கும் நற்செய்தி

Share

புதிய புரட்சியை நோக்கி இலங்கை: ஜனாதிபதியால் வரக் காத்திருக்கும் நற்செய்தி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்க ஒரகல் கிளவுட் உட்கட்டமைப்பு (OCI) இணக்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நேற்று (11) ஒரக்கல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

தரவு சுயாதீனத் தன்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கப்பாடுகளை உறுதிப்படுத்தி, அரசாங்க விண்ணப்பங்கள், இலத்திரனியல் நிர்வாக வசதிகள் மற்றும் தேசிய தரவு கட்டமைப்பு ஒன்றை ஸ்தாபிப்தற்கும் முன்வருமாறு ஜனாதிபதி அதன்போது, ஒரகல் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அத்தோடு, பொருளாதாரம் மற்றும் நிர்வாகச் செயற்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கையின் டிஜிட்டல் மாற்றம், பின்டெக் சேவை மற்றும் கிளவுட் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திகொள்ளல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் நகர்வை விரைவுபடுத்தும் பின்டெக் மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவு வசதிகளுக்கான ஆரம்பகட்ட முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடலகள் மேற்கொள்ப்பட்டுள்ளது.

இதற்காக, கொழும்பு துறைமுக நகரத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கல் மையமொன்றை அமைக்குமாறு ஒரகல் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அது தெற்காசிய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் (Cloud Hub) மையமாக செயற்படும். அதற்கான குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புமாறு ஜனாதிபதி மைக் சிசிலியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...