அரசாங்கத்திற்கும் தங்களுக்கும் முரண்பாடுகள் இருப்பினும் மக்களை நெருக்கடிக்குள் தள்ள நாம் தயாரில்லை என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய (17) விவாதத்தில் கலந்துகொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், எதிர்கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் முரண்பாடுகள் உள்ளதை போன்று, அரசாங்கத்துடன் எமக்கு முரண்பாடுகள் உள்ளன. ஆனால் அதற்காக மக்களை நெருக்கடிக்குள் தள்ள நாம் தயாரில்லை. எதிர்க்கட்சியினர் மீண்டும் தமக்கு அரசாங்கத்தை கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.
கடந்த நல்லாட்சியின் ஆட்சியிலேயே நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்கியது எனவும் இதன்போது கருத்து வெளியிட்டார்.
ஜனாதிபதியின் தீர்மானங்கள் நல்ல திட்டமுனைப்புகளை கொண்டிருந்தாலும், அதில் சில தவறுகள் ஏற்பட்டுள்ளன. அவை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். மக்களை ஒன்று திரட்டி முன்னெடுக்கப்படும் எதிர்க்கட்சியின் போராட்டங்களால் நாடு மீண்டும் பழைய கொரோனா வைரஸ் நிலைமைக்கே செல்லும் என தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment