2 13
இலங்கைசெய்திகள்

அசோக ரன்வல எம்.பி பதவியிலிருந்தும் விலக வேண்டும் : வெளியான தகவல்

Share

அசோக ரன்வல எம்.பி பதவியிலிருந்தும் விலக வேண்டும் : வெளியான தகவல்

புதிய சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியிலிருந்தும் பெயரினை முன்மொழியவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.

அசோக ரன்வல (Asoka Ranwala) சபாநாயகர் பதவியில் இருந்து விலகினால் மட்டும் போதாது, அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் (Colombo) இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஒரு பொறுப்பான கட்சியாக செயற்பட வேண்டும். வெளிப்படையாக, சபாநாயகர் பதவியில் இருந்து விலகினால் மட்டும் போதாது.

இவர்கள் செய்தது நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் செயலாகும். அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும். இது தொடர்பாக எமக்கு கடுமையான விமர்சனங்கள் உள்ளன.

செவ்வாய்கிழமை (17) எதிர்க்கட்சியிலிருந்தும் சபாநாயகர் பதவிக்காக பெயர் ஒன்றை முன்மொழிவோம் என எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் அடுத்த சபாநாயகராக திசைகாட்டியால் பரிந்துரைக்கப்படும் நபரின் மீதும் நம்பிக்கை இல்லை. இதில் பலத்த சந்தேகம் உள்ளது.

அடுத்த முறை நம்மை ஏமாற்ற முடியாது. நாங்கள் ஏமாற்றப்பட்டு அவரை ஆதரித்தோம். எனவே எதிர்வரும் நாடாளுமன்ற தினத்தில் எதிர்க்கட்சியில் இருந்தும் பெயரை கண்டிப்பாக முன்மொழிவோம். ஆனால் முன்மொழியப்படுபவர் தவறான கல்விச் சான்றிதழ்களைக் கொண்டிருப்பவரில்லை” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...