அந்நியச்செலாவணி வீழ்ச்சிக்கு எதிர்க்கட்சியே காரணம்!

foreign

வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சிக்கு எதிர்க்கட்சியே காரணமென இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்தார்.

” 2015 ஆம் ஆண்டு 8.2 வீதமாக இருந்த கையிருப்பு 2019இல் 7.6 வீதமாக குறைவடைந்ததற்கு நல்லாட்சி அரசே காரணம்.

தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்ற போதும் அரசையும் நாட்டையும் வீழ்ச்சியுறச் செய்வதற்காக எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை . தற்போதைய சவால் நிலையை நாம் நிச்சயம் எதிர்கொள்வோம்.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version