Baby Death
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

3 வயது இரட்டையர்களில் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு! – ஊரெழுவில் சம்பவம்

Share

வீட்டுக் கிணற்றில் தவறி வீழ்ந்த 3 வயது பாலகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், ஊரெழு மேற்கில் நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இரண்டையர்களில் ஒருவரான கிருஷ்ணகாந்தன் சித்தாத் (வயது-3) என்ற பாலகனே உயிரிழந்தார்.

இரட்டையர்கள் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அவர்களுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு தாயார் தேநீர் தயாரிக்க சமையலறைக்கு சென்றுள்ளார்.

மீள வந்து பார்த்த போது பாலகன் ஒருவரைக் காணவில்லை. வீட்டு வளவில் தேடிய பின் கிணற்றை பார்த்த போது பாலகன் கிணற்றில் தவறி வீழ்ந்தமை கண்டறிப்பட்டது.

உடனடியாக மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதும் பாலகன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

கட்டுக் கிணற்றை சுற்றி தகரத்தினால் வேலியிடப்பட்டுள்ளது. அதில் ஏறிய போதே பாலகன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்திருக்கலாம்என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணையை மேற்கொண்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...