மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொற்று!
சிறு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவும் (Janaka Vakkumpura) கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
ஏற்கனவே 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் இவர் தொற்றுக்குள்ளான 23ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இவரது மகள் முன்னர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில், உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டதையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
Leave a comment