IMG 2777 1024x576 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமையில்; வறுமை ஒழிப்புக்குத் ‘தன்னிறைவுப் பிரஜா சக்தி’ திட்டம்” – க. பிரபு எம்.பி.!

Share

இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். வறுமையான மக்களைக் கொண்ட நாடாகத் தொடர்ந்து இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது என தேசிய மக்கள் சக்தியின் (NPP) மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற ‘பிரஜா சக்தி’ தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் வறுமை ஒழிப்பு என்ற பெயரில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அவை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதால் தோல்வியடைந்த திட்டங்களாகவே அமைந்தன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, கிராமிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, கிராம மட்ட அபிவிருத்தியை உறுதி செய்யும் நோக்கில் ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமிய ரீதியில் வறுமையை ஒழித்து, சுபீட்சமான நாட்டை உருவாக்கும் நோக்கிலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் தலைமையில் மாவட்டத்தில் பிரஜா சக்தி குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக:

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 48 கிராம சேவகர் பிரிவுகளுக்கான பிரஜா சக்தி தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “கிராமிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதன் மூலமே நாட்டின் அபிவிருத்தியைத் தன்னிறைவாகக் காண முடியும் என்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சிந்தனைக்கு அமைவாகவே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.” என்றும், “தலைவர்களாக நியமனம் பெறுபவர்கள் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாகப் பொறுப்புடன் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...