24 6627165564cc2
இலங்கைசெய்திகள்

வீதியில் அலைந்து திரிந்த பெண்மணி : பிரதேச மக்களின் நெகிழ்ச்சி செயல்

Share

வீதியில் அலைந்து திரிந்த பெண்மணி : பிரதேச மக்களின் நெகிழ்ச்சி செயல்

குருணாகலில் வீதியில் தனித்து நின்ற வயோதிப பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று விடும் பணியில் பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தம்மிட பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 90 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

படல்கம காசிவத்த பகுதியில் குறித்த பெண் சுற்றித் திரிந்த போது, ​​பிரதேசவாசிகள் அவர் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் படல்கம பொலிஸ் அதிகாரிகள் வந்து பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை பிரதேசத்தில் இருந்து தான் அந்தப் பகுதிக்கு வந்ததாக அவர் அங்கு தெரிவித்துள்ளார். அதற்கமைய, அந்த பெண்ணை அவரது வீட்டில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த பெண்ணை இரண்டு நாட்களாக பிரதேசவாசிகள் தேடி வந்ததாகவும் அவர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...