எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதும் வீதியோரங்களில் வியாபாரிகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை உற்பத்தியாளர்கள் தற்காலிகமாக தமது உற்பத்திகளை சாலையோரங்களில் விற்க முடியுமென காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் தெரிவித்தார்.
பண்டிகையின் பொருட்டு ,உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை சாலையோரங்களில் விற்க தற்காலிகமாகவே ,அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலகத்தின் அனுமதியும் கண்காணிப்பும் இன்றி நிரந்தர வர்த்தக நிலையங்களை அமைக்க வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
#Srilankanews
Leave a comment