gover
இலங்கைசெய்திகள்

சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு சலுகை!

Share

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சிறிய அளவிலும் பொருட்களை தயாரிக்கும் தொழில் முயற்சியாளர்கள் எவ்வித கட்டணமும் இன்றி இன்று முதல் வீதியோரங்களில் இருந்து பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்காலிகமாக இந்த அனுமதி வழங்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஏப்ரல் 12ம் திகதி வரை வீதியோரங்களில் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் அந்தந்த பகுதியின் பிரதேச செயலாளரின் ஒப்புதலுடனும் மேற்பார்வையுடனும் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.

மஹரகம நகரம் உட்பட பல இடங்களில் இவ்வாறான விசேட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதே போன்று நாடளாவிய ரீதியில் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் பண்டிகைக் காலம் முடியும் வரை உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு தற்காலிகமாக விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...