கடும் பனிப்பொழிவின் பிடியில் நுவரெலியா

Nuwara Eliya

நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (25) காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

நுவரெலியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் காலத்தில் பூக்கள் பூத்துக் காணப்படுவதோடு, பனிப்பொழிவும் அதிகமாகவே காணப்படும். மேலும், நுவரெலியா நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இவ்வாறான நிலைமையே காணப்படும்.

நுவரெலியாவில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருவதாகவும், வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் பெய்யும் பனிப்பொழிவு காரணமாக மலையக மரக்கறிச் செய்கை மற்றும் தேயிலை பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

#SrilankaNews

Exit mobile version