4 16
இலங்கைசெய்திகள்

அரசியலில் ஓய்வு என்ற சொல்லை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது: ஜனாதிபதி விளக்கம்

Share

அரசியலில் ஓய்வு என்ற சொல்லை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது: ஜனாதிபதி விளக்கம்

இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ‘ஓய்வு’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் யாரும் ஓய்வு பெறவில்லை. இறந்த பின்னரே ஓய்வு என்ற நிலை இருந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று சுட்டிக்காட்டியுள்ளார்

பொதுத்தேர்தலில் போட்டியிடும், தமது கட்சி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இவ்வாறான சூழல்களே புரட்சிகள் எனப்படும் என்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இம்முறை தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவே என்று கூறிய அவர் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சி முகாமினால் சுமத்தப்பட்ட தவறான மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை 21 நாட்கள் முடிவதற்கு முன்னரே, தமது அரசாங்கத்தினால் நிரூபிக்க முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது, எதிர்க்கட்சி முகாமில் பொதுத் தேர்தலுக்கான கோஷங்கள் ஏதும் இல்லாமல் போய்விட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எதிர்க்கட்சி முகாம் தங்களுக்கு எதிராக தவறான விமர்சனங்களைச் செய்தது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குப் பிறகு மோதல்கள் ஏற்படும் என்றும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகள் இருக்கும் என்றும் சொன்னார்கள்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறையும், இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட நாடாகும் என்றும் கூறினார்கள்.

ஆனால் இந்த விமர்சனங்கள் அனைத்தும் 21 நாட்களுக்குள் அவர்கள் கண் முன்னே சிதைந்துவிட்டன என்று அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...