G.C.E
இலங்கைசெய்திகள்

சாதாரண தரத்தில் சித்தி பெற்றவர்களுக்கு அறிவித்தல்!!

Share

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி பரீட்சையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதியுடைய, பொருளாதார பிரச்சினையுடைய மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் வேலைதிட்டத்திற்காக கோரப்பட்டிருந்த விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி டிசெம்பர் 23 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.

இதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் குறித்த விண்ணப்பப்படிவத்தை தமது அதிபரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், குடும்ப பொருளாதார நிலைமை குறித்த கிராம உத்தியோகத்தரின் சிபாரிசு கடிதம் ஆகியவற்றுடன், 2022-12-23 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட வேண்டும்.

பின்னர் இவ் விண்ணப்பம் பாடசாலை அதிபர் மூலமாக வலயக் கல்வி அலுவலகத்துக்கூடாக ஜனாதிபதி அலுவலகத்திடம் கையளிக்கப்பட வேண்டும்.

எனினும் விண்ணப்பம் கையளிக்கப்பட வேண்டிய முறை தொடர்பில் முறையான தெளிவின்மைக் காரணமாக பெரும் எண்ணிக்கையான விண்ணப்பங்கள் நேரடியாகவே ஜனாதிபதி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

எனவே காலதாமதமின்றி புலமைப்பரிசில் வழங்கும் இவ் வேலைத்திட்டத்தை முறையாக முன்னெடுப்பதற்காக, அனைத்து விண்ணப்பங்களையும் பாடசாலை அதிபரிடம் கையளிக்குமாறு நாம் விண்ணப்பதாரிகளை கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் விண்ணப்பதாரிகள் அரசாங்க அல்லது எவ்வித கட்டணமும் அறவிடப்படாத தனியார் பாடசாலைகளில் கல்வி கற்பவர்களாகவும் அவர்களது மாதாந்த குடும்ப வருமானம் ரூ.75,000/- ஐ அண்மிக்காத வகையிலும் இருப்பது அவசியமாகும்.

அத்துடன் விண்ணப்பதாரர்கள் கடந்த 2021 (2022) ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையாக தோற்றி 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான முழுமையான தகைமையைக் கொண்டிருப்பதும் கட்டாயமாகும்.

ஒவ்வொரு கல்வி வலயத்திலுமுள்ள 30 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள்  க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை, அவர்களுக்காக மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் 24 மாதங்களுக்கு புலமைப்பரிசில்  வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...