முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தற்போதைய வௌிநாட்டு பயணங்களுக்கு அவரது சொந்த நிதியையே பயன்படுத்துகிறார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பயணங்களுக்காக அவர் தனது தனிப்பட்ட நிதியிலேயே செலவுகளை மேற்கொள்கிறார். இராச நிதியை பயன்படுத்தவில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்கு செல்வதற்கான விமான செலவுகளை இலங்கை அரசாங்கமே செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
#SriLankaNews