Jayantha Samaraweera
அரசியல்இலங்கைசெய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடப் போவதில்லை! – தேசிய சுதந்திர முன்னணி

Share

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடப் போவதில்லை என்று விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர எம்.பி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது நாட்டை மேலும் சீர்குலைக்கும் எனவும், நாட்டை சீர்குலைக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் 11 கட்சிகளின் கூட்டணி கட்சிகள் உடன்பட போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக பதவி நீக்க பிரேரணை கொண்டு வருவோம் என எதிர்க்கட்சி கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தது.

இதன்படி, அரசுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ள 41 ஆளும் தரப்பு எம்.பிகளின் ஆதரவை பெற எதிரணி முயன்றுவரும் நிலையில் சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்துள்ள 11 கட்சிகளின் கூட்டணி ஆதரவுவழங்க மறுத்துள்ளது என அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...